பொறியியல் துணை கலந்தாய்வு அக்டோபர் 20 முதல் 23 வரை நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அறிவிப்பு

 பொறியியல் துணைக் கலந்தாய்வு அக்டோபர் 20 முதல் 23 வரை நடைபெறும் என்று தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. அதன்படி, இன்று முதல் 17-ம் தேதி வரை http://tneaonline.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் அரசுப் பள்ளிகளில் 6-12 வரை படித்தவர்கள் 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


12-ம் வகுப்பு துணைத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றோர் துணை கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம். 19ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். மேலும், பொறியியல் கல்லூரிகளில் சுமார் 1 லட்சம் காலியிடங்கள் உள்ள நிலையில், தற்போது துணை கலந்தாய்வு நடைபெற உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்று, வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்களுக்கான நுழைவுத் தேர்வு வரும் டிசம்பர் 12ல் நடைபெறும் என்றும் தேர்வுக்கு இன்று முதல் வரும் நவம்பர் 3ம் தேதி வரை https://nbe.edu.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும் தேசிய தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post