தமிழகத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பீட்டுத் தேர்வு

 தமிழகத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பீட்டுத் தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


தமிழகத்தல் கடந்த நவம்பர் 1-ம் தேதி முதல் அரசு வழங்கி உரிய வழிகாட்டு நெறிமுறைகளின் படி 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் சுழற்சி முறையில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்நிலையில் தொற்று பாதிப்பு ஏற்பட்ட சமயத்தில் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியைக் குறைக்கும் பொருட்டு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களின் கற்றலை மேம்படுத்த புத்தாக்க பயிற்சிக் கட்டகம் தயாரிக்கப்பட்டு உள்ளது.


  முதல் கட்டமாக புத்தாக்கப் பயிற்சிக் கட்டகத்தில் 9, 10ஆம் வகுப்புகளுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கும், 11, 12ஆம் வகுப்புகளுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், உயிரி தாவரவியல், விலங்கியல், உயிரி விலங்கியல், வரலாறு, பொருளியல், கணக்குப்பதிவியல், ஆகிய பாடங்களுக்கும், தலா 60 கொள்குறி மதிப்பீட்டு வினாக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. 9 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு உயர்தொழில்நுட்ப ஆய்வகம் மூலம் மதிப்பீட்டுத் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து தலைமை ஆசிரியர்களும் மதிப்பீட்டுத் தேர்வை வரும் 12ஆம் தேதி காலை ஒன்பது மணி முதல் மாலை 5 மணிக்குள் ஒருமணி நேரம் கால அவகாசம் வழங்கி நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை தனது உத்தரவில் கூறியுள்ளது.

Post a Comment

Previous Post Next Post